உக்ரைனில் இருந்து தப்பித்து ருமேனியாவுக்கு பஸ்சில் 1000 கி.மீ. பயணம் செய்தோம்: வால்பாறை திரும்பிய 3 மாணவிகள் பேட்டி
உக்ரைனில் இருந்து தப்பித்து ருமேனியாவுக்கு பஸ்சில் 1000 கி.மீ. பயணம் செய்தோம்: வால்பாறை திரும்பிய 3 மாணவிகள் பேட்டி வால்பாறை: உக்ரைனில் இருந்து தப்பித்து 1000 கி.மீ. பஸ்சில் பயணம் செய்து ருமேனியாவுக்கு வந்து அங்கிருந்து விமானத்தில் மும்பை சேர்ந்தோம் என்று வால்பாறை திரும்பிய மாணவிகள் 3 பேர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த மாணவிகள் வர்ஷா, தீபிகா, மோகனா ஆகியோர் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தனர். இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இந்தியர்கள் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை மாணவிகள் 3 பேரும், உக்ரைனில் இருந்து பஸ் மூலம் ருமேனியா சென்று அங்கிருந்து விமானத்தில் மும்பை வந்தனர். பின்னர், மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். வால்பாறை திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து மாணவிகள் கூறுகையில்,``கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் க...