ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை.. மனைவி புகார்.. வாபஸ் பெற தொடர்ந்து நெருக்கடி... Miatamil
ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை.. மனைவி புகார்.. வாபஸ் பெற தொடர்ந்து நெருக்கடி... Miatamil தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சிந்தமணி நகரில் வசித்து வருபவர்  முத்துச்சேர்மன். இவருடைய மனைவி  பஞ்சவர்ணம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்  விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். திடீரென உடல்நிலை சரியில்லாததால் பணிக்கு செல்ல முடியவில்லை. பிப்ரவரி  25ம் தேதி  முத்துச்சேர்மன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும்  சூறவாளி என்பவர் விறகு வெட்டும் வேலைக்காக அழைத்து சென்றார்  மாலையில் வீடு திரும்பிய மனைவியிடம் முத்துச்சேர்மன் அழுது கொண்டே நடந்தை கண்ணீர் மல்க கூறினார்.  அப்போது  சூறாவளி தம்மை அழைத்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து வலுக்கட்டாயமாக  தனக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டனர் எனத் தெரிவித்தார். அத்துடன்  வலி அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் ரூ 1,100க்கு காசோலையையும் கொடுத்ததாக...