பள்ளிகளுக்கு விடுமுறை.. இந்த இந்த மாவட்டங்களில் பள்ளி விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை.. இந்த இந்த மாவட்டங்களில் பள்ளி விடுமுறை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து சென்னை வானிலை ஆய்வு விடுத்துள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, மேலும் வலுவிழக்கக்கூடும். இதனால் இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழகம்,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலஇடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 23 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியமத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, க...