ரேஷன் கடைகளில் கைரேகை இல்லாமல் பொருட்கள் கையாடல் செய்து மோசடி ! Miatamil
ரேஷன் கடைகளில் கைரேகை இல்லாமல் பொருட்கள் கையாடல் செய்து மோசடி ! Miatamil தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் 100 சதவீதம் கைரேகை பயன்படுத்தி மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கூறியிருந்தது. ஆனால் தமிழகத்தில் செயல்பட்டு வரும் குறிப்பாக சென்னையில் 15 கடையில் கைரேகை மூலம் பொருட்கள் கொடுக்காமல் ப்ராக்ஸி முறையில் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட 15 ரேஷன்கடை ஊழியர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்கியுள்ளனர். மேலும் இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவாறு அனைத்து ரேஷன் கடைகளிலும் சோதனை செய்ய வேண்டுமெனவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டியலை சரி பார்த்த போதுதான் இந்த சம்பவத்தை கண்டறிந்துள்ளனர்.