தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக அந்த பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்கள் கவனத்திற்கு தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஜனவரி 31ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் படிப்படியாக தளர்வுகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி மாணவர்களின் கல்வி நலன் கருதி கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடத்திற்கான காலிப்பணியிடங்களை நிரப்ப பல்...