மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு.. 150-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து 3 நாளில் குற்றவாளியை கைது செய்த போலீசார்!
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு.. 150-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து 3 நாளில் குற்றவாளியை கைது செய்த போலீசார்! சென்னையில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை, 150-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து 3 நாளில் போலீசார் கைது செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் பெருமாள் கோவில் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ருக்மணி (87). இவர் சோலையப்பன் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல வேண்டி கடந்த 1ம் தேதி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி ருக்மணியை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 7 1/2 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு அருகில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடினார். இந்த சம்பவத்தில் மூதாட்டிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் மருமகன் பரத் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்...