பல்வேறு வதந்திகளுக்கு பின்னர் மீண்டும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண வீடியோக்கள் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில்! குஷியான ரசிகர்கள்!773324209
பல்வேறு வதந்திகளுக்கு பின்னர் மீண்டும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண வீடியோக்கள் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில்! குஷியான ரசிகர்கள்! நடிகை நயன்தாரா கடந்த மாதம் அவரது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இவர்களது திருமணத்தில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பும் உரிமையை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு ரூபாய் 25 கோடிக்கு, கொடுத்து விட்டதாகவும் இதனை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இவர்களுடைய திருமணம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், விக்னேஷ் சிவன், அவ்வப்போது தன்னுடைய திருமண புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களுடைய ஒப்பந்தத்தை மீறி விக்னேஷ் சிவன் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், இதனால் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் உரிமையை திரு...