கண்ணுபட்டு போச்சுய்யா சங்கரப்பா.. 25 - ஐ மணந்த 50 பலியான சோகம்.. சிங்கிள் பசங்க வயிற்றில் பயர் விட்டவர்.!
கண்ணுபட்டு போச்சுய்யா சங்கரப்பா.. 25 - ஐ மணந்த 50 பலியான சோகம்.. சிங்கிள் பசங்க வயிற்றில் பயர் விட்டவர்.! 50 வயதில் 25 வயது இளம் பெண்ணை மணந்ததால் சமூக வலைதளங்களில் பிரபலமான சங்கரப்பா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் மனைவியுடன்காதல் டூயட்டுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டவருக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக சமூக வலைதளங்களில் வைரலாகி சிங்கிள் பசங்களின் வயிற்றில் பயரை எரிய விட்ட 50 வயது சங்கரப்பா இவர் தான்..! கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் அக்கிமரிபால்யம் கிராமத்தை சேர்ந்த 50 வயதான சங்கரப்பா , கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த மேகனா என்ற 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அப்போது வைரலாகியதால் ஒரே நாளில் பிரபலமானார் சங்கரப்பா..! திருமணம் முடிந்த கையோடு சங்கரப்பா தனது இளம் மனைவி மேகனாவின் விருப்பத்திற்கு ஏற்ப இன்ஸ்டாகிராமில் காதல் ...