செக் மோசடி: தோனி மீது வழக்குப்பதிவு!818819160
செக் மோசடி: தோனி மீது வழக்குப்பதிவு! காசோலை மோசடி புகார் காரணமாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட்டர் தோனி உட்பட 8 பேர் மீது, பீகார் மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிகளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி உள்ளார். அதில் 178 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையே, சில விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில், நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உள்பட 8 பேர் மீது பீகார் மாநிலம் பெகுசராய் சிஜேஎம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேல் விசாரணையை மாஜிஸ்திரேட் அஜய் குமார் மிஸ்ராவுக்கு அனுப்பியது. இதனையடுத்து அவர் அடுத்த விசாரணையை வரும் ஜூன் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக இவ்வழக்கு விசாரணையில், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா...