செக் மோசடி: தோனி மீது வழக்குப்பதிவு!818819160


செக் மோசடி: தோனி மீது வழக்குப்பதிவு!


காசோலை மோசடி புகார் காரணமாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட்டர் தோனி உட்பட 8 பேர் மீது, பீகார் மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிகளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி உள்ளார். அதில் 178 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையே, சில விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில், நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடித்துள்ளார். 

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உள்பட 8 பேர் மீது பீகார் மாநிலம் பெகுசராய் சிஜேஎம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேல் விசாரணையை மாஜிஸ்திரேட் அஜய் குமார் மிஸ்ராவுக்கு அனுப்பியது. இதனையடுத்து அவர் அடுத்த விசாரணையை வரும் ஜூன் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

முன்னதாக இவ்வழக்கு விசாரணையில், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது தெரியவந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, 30 லட்சம் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது.

ஆனால், இந்த உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகததால், நியூ குளோபல் நிறுவனம் மீதமுள்ள உரங்களை திரும்பப் பெற்றது. அதற்கு பதிலாக 30 லட்சம் காசோலையை டிஎஸ் நிறுவனத்திடம் வழங்கியது. ஆனால், காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது, அது செல்லுபடியாகவில்லை.

 

இதன் காரணமாக, நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், நியூ குளோபல் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காமலும், பதிலளிக்காமலும் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா வழக்கு தொடர்ந்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Realme Narzo 50 Pro 5G, Narzo 50 5G Launched in India, TechLife Watch SZ100 Debuts Alongside: Price, Specifications

2 Budget