உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு! உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யாவின் தாக்குதல் நடைபெறும் இடங்களில் சுமார் ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பேருந்துகள் மூலமாக உக்ரைனின் மேற்கு பகுதிக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் கார்கிவ் மற்றும் சுமி ஆகிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இங்கு சுமார் ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை மீட்பது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறியதாவது, உக்ரைனில் இருந்து கடைசி இந்தியர் மீட்கப்படும் வரை ஆபரேஷன் கங்கா தொடர்ந்து நடைபெறும். அதிகபட்சமாக உக்ரைனில் 3 ஆயிரம் இந்தியர்கள் தற்போது உள்ளதாக மதிப்பிட்டுள்ளோம். போர் நடந்து வரும் பகுதிகளில் இருக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு முக்கியத்த...