ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை.. மனைவி புகார்.. வாபஸ் பெற தொடர்ந்து நெருக்கடி... Miatamil


ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை.. மனைவி புகார்.. வாபஸ் பெற தொடர்ந்து நெருக்கடி... Miatamil


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சிந்தமணி நகரில் வசித்து வருபவர்  முத்துச்சேர்மன். இவருடைய மனைவி  பஞ்சவர்ணம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்  விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். திடீரென உடல்நிலை சரியில்லாததால் பணிக்கு செல்ல முடியவில்லை. பிப்ரவரி  25ம் தேதி  முத்துச்சேர்மன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும்  சூறவாளி என்பவர் விறகு வெட்டும் வேலைக்காக அழைத்து சென்றார்  மாலையில் வீடு திரும்பிய மனைவியிடம் முத்துச்சேர்மன் அழுது கொண்டே நடந்தை கண்ணீர் மல்க கூறினார். 


அப்போது  சூறாவளி தம்மை அழைத்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து வலுக்கட்டாயமாக  தனக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டனர் எனத் தெரிவித்தார். அத்துடன்  வலி அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் ரூ 1,100க்கு காசோலையையும் கொடுத்ததாக கூறினார். பஞ்சவர்ணம் மற்றும் அவரது உறவினர்கள் சூறாவளியிடம் இது குறித்த விசாரித்தனர். அதற்கு அவர் எல்லோரும் பண்ணுவது தான் . நான் கூட செய்து இருக்கேன். இந்த பிரச்சனையை இத்துடன் விட்டுவிடுங்கள் என கையில் மேலும் ரூ3000 கொடுத்துள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி வழக்கறிஞர் மூலம்  சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவரிடம் கேட்டார்.அதற்கு அவர் முத்துசேர்மன் சம்மதத்தின் பேரில் தான் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் அவர் கைநாட்டு வைத்துள்ளார் எனக் கூறினார். இதனையடுத்து பஞ்சவர்ணம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் புகாரை உடனடியாக வாபஸ் பெற தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியில்  சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்பக்காட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக  புரோக்கர்கள் மூலம் ஆள்களை பிடித்து கொடுப்பது பலருக்கும்  சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. வேம்பாரில் உள்ள  அரசு பிப்ரவரியில் ஆண்களுக்கான குடும்பக் கட்டுபாடு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதற்கு வந்த  7 பேரின் சம்மதத்தின் பேரில் தான் அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

Realme Narzo 50 Pro 5G, Narzo 50 5G Launched in India, TechLife Watch SZ100 Debuts Alongside: Price, Specifications

2 Budget