போரில் இதுவரை 11 ஆயிரம் ரஷிய வீரர்கள் மரணம்; உக்ரைன் அறிவிப்பு


போரில் இதுவரை 11 ஆயிரம் ரஷிய வீரர்கள் மரணம்; உக்ரைன் அறிவிப்பு


போர் தொடக்கத்தில் இருந்து இதுவரை 11 ஆயிரம் ரஷிய வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கீவ்,

நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 12வது நாளாக இன்று நீடித்து வருகிறது.  இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதில் இருந்து இதுவரை 2,203 உக்ரைனிய ராணுவ உட்கட்டமைப்புகளை தகர்த்து இருக்கிறோம் என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து இருந்தது.  இதுபற்றி, ரஷிய ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரியான இகோர் கொனாஷெங்கோவ் கூறும்போது, மொத்தம் 69 விமானங்கள் தரை பகுதியிலும், 24 விமானங்கள் வான்வெளியிலும், 778 பீரங்கிகள் மற்றும் பிற கவச போர் வாகனங்கள், 77 ஏவுகணை தாக்குதல் நடத்தும் சாதனங்கள், 279 தரையில் இருந்து தாக்குதல் நடத்தும் சிறிய ரக பீரங்கிகள், 553 சிறப்பு ராணுவ வாகனங்கள் மற்றும் 62 ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்து உள்ளோம் என கூறினார்.

உக்ரைனின் பிரியுத்னோய், ஜாவித்னே-பஜான்னே, ஸ்டாரொம்லைனோவ்கா, ஒக்தியாபிரஸ்கோய் மற்றும் நோவோமெய்ஸ்கோய் ஆகிய பகுதிகளை ரஷிய ஆயுத படைகள் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.  11 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னேறி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், உக்ரைனுக்கான வெளிவிவகார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தியதில் இருந்து மொத்தம் 11 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அமைச்சகம் பகிர்ந்து உள்ள செய்தியில், பல்வேறு வகைகளை சேர்ந்த 999 கவச வாகனங்கள், 46 விமானங்கள், 68 ஹெலிகாப்டர்கள், 290 பீரங்கிகள், 117 நீண்ட தொலைவை தாக்கும் பீரங்கி துண்டுகள் மற்றும் 50 ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை போரில் வீழ்த்ப்பட்டு உள்ளன.  இதுதவிர, 60 பதுங்கு குழிகள், 454 வாகனஙகள், 3 கப்பல்கள், 7 ஆளில்லா விமானங்கள் மற்றும் 23 ரஷியாவை சேர்ந்த விமான அழிப்புக்கான போர் சாதனங்கள் ஆகியவையும் அழிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்து உள்ளது.

Comments

Popular posts from this blog

Poulet au Vin Jaune de Jura Creamy Braised Chicken with Jura Wine and Morels #Wine

2 Budget