16 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் சிரிப்பழகி லைலா


16 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் சிரிப்பழகி லைலா


கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் படத்தில் 16 ஆண்டு கால இடைவெளிக்கு பின் லைலா மீண்டும் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகம் ஆனவர் நடிகை லைலா.  அதன்பின் கார்த்திக் உடன் ரோஜாவனம், அஜித் உடன் தீனா மற்றும் பரமசிவன், சூர்யா உடன் நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து மற்றும் மவுனம் பேசியதே, விக்ரம் உடன் தில் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றார்.

கடைசியாக அஜித்தின் திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  அவரது சிரிப்புக்கு என்றே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இருந்த காலமும் உண்டு.  இதன்பின்பு ஈரானிய நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, மும்பைக்கு சென்று குடும்ப வாழ்க்கையில் பயணிக்க தொடங்கி விட்டார்.  இதனால், நடிப்பு பக்கம் அவர் தலை காட்டவில்லை.

இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் சர்தார் படத்தில் நடிகை லைலா நடிக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.  அவர் முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இதற்காக 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தும் முடித்து விட்டார்.

லைலா நடிப்பதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சிம்ரன் முடிவு செய்யப்பட்டு இருந்தது.  ஆனால், கொரோனா பெருந்தொற்றால் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டன.

வேறு சில படவேலைகளில் இருந்த சிம்ரன், இந்த படத்திற்கு தேதி கொடுக்க இயலவில்லை.  அதனால், இந்த கதாபாத்திரத்திற்கு லைலா சரியாக பொருந்துவார் என படதயாரிப்பாளர்கள் உணர்ந்தனர் என்று படப்பிடிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.  இதனால், 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வரும் நடிகை லைலாவை வரவேற்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

rrb ntpc stage ii exam date: RRB NTPC CBT-2 தேர்வு தேதி அறிவிப்பு; முழு விவரங்களை இங்கே சரிபார்க்கவும்..! – rrb ntpc cbt 2 2022 exam date declared, pay level 4 & 6 paper on may 9 and 10

ஜீப் - லாரி மோதல் 6 பேர் பரிதாப பலி

தனுசு ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 07 முதல் நவம்பர் 13 ) - Dhanusu Rasipalan.