தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.80 வரை திடீர் உயர்வு – இன்று முதல் அமல்!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.80 வரை திடீர் உயர்வு – இன்று முதல் அமல்!
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக்கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதற்கிடையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் நிலவும் கொரோனா பரவல் தாக்கத்தால் கடைகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றப்பட்டு, தற்போது மீண்டுமாக வழக்கமான முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீப காலமாக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வடையும் என்று தகவல்கள் வெளியன் வண்ணம் இருந்த நிலையில், தற்போது இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் ரூ.10 முதல் ரூ.80 வரை மதுபானங்களின் விலை அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் குவாட்டர் ஒன்றின் சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஆஃப் பாட்டில் சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40 எனவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் புல் பாட்டில் சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்வை கண்டுள்ளது. மேலும் பீர் வகைகளுக்கு ரூ.10 வரையும் விலை உயர்வடைந்துள்ளது. இந்த விலை உயர்வு அனைத்தும் இன்று (மார்.7) முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இப்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் படி, மதுவகைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.10.35 கோடி கூடுதல் வருவாயும், பீர் வகைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.1.76 கோடி என மொத்தம் ரூ.4396 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment