எடப்பாடி வைத்த கோரிக்கை: கோபத்தை கொட்டிய அமித் ஷா


எடப்பாடி வைத்த கோரிக்கை: கோபத்தை கொட்டிய அமித் ஷா


அதிமுகமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எதிர்கட்சிகளை மிரட்டுவதற்காக ஆளுங்கட்சி வழக்கமாக எடுக்கும் நடவடிக்கைதானே என ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்டஎடப்பாடி பழனிசாமிதற்போது நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்டுள்ளாராம்.

எப்படியேனும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திமுக அரசு நினைப்பதாலே மீண்டும் மீண்டும் சோதனைகளை நடத்துகின்றனர். ஏற்கெனவே உட்கட்சி பிரச்சினைகள், சசிகலா சுற்றுப் பயணம் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கும் எடப்பாடிக்கு அடுத்து நம்மை குறிவைப்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். இதனால் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட தீர்மானித்துள்ளார்.

அதன் பின்னர்தான் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரையை அழைத்துள்ளார் எடப்பாடி. பிரதமர் மோடி, அமித் ஷா இருவரையும் சந்தித்து திமுக அரசு முன்னாள் அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. திமுகவை நீங்கள் தான் கண்டித்து வைக்க வேண்டும் என உரிமையுடன் கோரிக்கை வைக்க சொல்லியதாக கூறுகிறார்கள்.
ஸ்டாலின் கொடுத்த க்ரீன் சிக்னல்: தட்டி தூக்கிய அதிகாரிகள்!
தம்பி துரையும் இருவரையும் சந்தித்து நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர் மெதுவாக எடப்பாடி பழனிசாமி சொன்ன விஷயங்களையும் கூறியுள்ளார். என்ன டென்ஷனில் இருந்தாரோ அமித் ஷா கோபமாக சில வார்த்தைகளை பேசினாராம்.

‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை ஓரங்கட்டி அதிமுக போட்டியிட்டது தவறு. மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் வெற்றி பெற்றாக வேண்டும். ஒற்றுமையாக இருந்து தேர்தலில் வெற்றி பெறுங்கள். எங்களை முழுமையாக நம்பி செயல்படுங்கள்’ என கூறினாராம்.

சசிகலா போடும் மெகா பிளான்: புதிய அணி ரெடி - மாநாட்டு பணிகள் தீவிரம்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் சிக்கல் இல்லை. அதிமுகவும் அதைத் தான் விரும்புகிறது. ஆனால் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறுங்கள் என்று சொன்னது தான் எடப்பாடிக்கு சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். அதாவது சசிகலாவுடன் ராசியாகும் படியும், அமமுகவை மீண்டும் அதிமுகவுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதை தான் அவர் அவ்வாறு கூறியதாக சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில்.

சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அமித் ஷா சென்னை வந்தபோது அமமுகவை கூட்டணியிலாவது கொண்டு வாருங்கள் என வலியுறுத்தியிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்போது பிடி கொடுக்கவில்லை. இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் போதும் யாருடைய தயவும் தேவை இல்லை என்பது போல் அலட்சியமாக இருந்துவிட்டாராம். ஒருவேளை அமமுகவை இணைத்திருந்தால் மேலும் 20 இடங்கள் அதிகம் பெற்றிருக்கலாம் என்பதுதான் பாஜக கணக்காக இருந்துள்ளது.
ஜெயக்குமாருக்கு உச்ச பதவி: ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி வைக்கும் செக்!
எனவே மக்களவைத் தேர்தலில் அந்த தவறு நடந்துவிடக்கூடாது என பாஜக நினைக்கிறதாம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் திமுக அரசின் மீது மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழச் செய்ய வேண்டும் என்று சில திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் திமுக அமைச்சர்களை குறிவைத்து சில ரெய்டு வைபவங்கள் நிகழும் என உறுதியாக சொல்கிறார்கள்.

Comments

Popular posts from this blog