ஸ்ரீபெரும்புதூர் அருகே நிகழ்ந்த கோர விபத்து… அரசு அதிகாரி பரிதாப மரணம்!


ஸ்ரீபெரும்புதூர் அருகே நிகழ்ந்த கோர விபத்து… அரசு அதிகாரி பரிதாப மரணம்!


ராணிப்பேட்டை மாவட்டம்தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவர்திருவள்ளூர் மாவட்டம்உணவு பாதுகாப்பு துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று (மார்ச் 17) பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அரக்கோணம் சாலையில் வீடு திரும்பியுள்ளார். பைக் ஓயமங்கலம் அருகே சென்ற போது சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் டாரஸ் லாரியில் எதிர்பாராமல் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து ஜெயவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மேம்பாலம்; இறுதிகட்ட பணிகள் தீவிரம்!


திருவள்ளூர் - அரக்கோணம் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகமான செல்வதும், சாலையின் ஓரங்களில் தேவையின்றி நிறுத்தப்படுவதாலும் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்து வரும் நிலையில் தற்போதுஅரசு அதிகாரிஒருவரே உயிரிழந்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Poulet au Vin Jaune de Jura Creamy Braised Chicken with Jura Wine and Morels #Wine

2 Budget