ஒவ்வொரு மணி நேரமும் பயம், பதற்றத்தில் இருந்தோம்.. உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நெல்லை, தென்காசியை மாணவர்கள் பேட்டி
ஒவ்வொரு மணி நேரமும் பயம், பதற்றத்தில் இருந்தோம்.. உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நெல்லை, தென்காசியை மாணவர்கள் பேட்டி
ஒவ்வொரு மணி நேரமும் பயம், பதற்றத்தில் இருந்தோம் - மத்திய, மாநில நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாக உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி கோவில்பட்டி மாணவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். உக்ரைனில் ஒவ்வொரு மணிநேரம், பதற்றம், பயத்தில் இருந்ததாகவும், மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான நடவடிக்கை காரணமாக தாயகம் திரும்பி உள்ளதாகவும், அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளனர். இதில் நவநீதஸ்ரீராம் என்ற மாணவரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உக்ரைனில் இருக்கும் போது அவரை தொடர்பு கொண்டு பேசியது குறிப்பிடதக்கது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்தவர் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கல்வி பயில சென்ற மாணவர்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து. மத்தியரசு அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தி மீட்டு வருகிறது. உக்ரைன் அருகில் உள்ள நாடுகளில் எல்லைபகுதிக்கு வரவைத்து அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரும் பணியை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
மேலும் உக்ரைனில் சிக்கி இருந்த தமிழக மாணவர்களையும் மீட்கும் வகையில் தமிழக அரசும், மத்தியரசுடன் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து மாணவர்களை நாள்தோறும் மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகத்சிங் தெருவை சேர்ந்த செல்வராஜ் - ராணி தம்பதியின் மகன் நவநீதஸ்ரீராம் உக்ரைன் வீனிஸ்டியா பகுதியில் உள்ள நேஷனல் மருத்துவக் கல்லூரியில் 5ம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே போன்று அதே கல்லூரியில் கோவில்பட்டி ஜோதிநகர் 2வது தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் - பானு தம்பதியின் மகள் ஹரிணி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இதே போல இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட கணேஷ் நகரை சேர்ந்த பாலமுருகன் - கற்பகவள்ளி தம்பதியின் மகள் திவ்யபாரதி அதே கல்லூரியில் 5ம் ஆண்டு படித்து வருகின்றனர். அது மட்டுமின்றி இவர்களுடன் 150க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் படித்து வந்துள்ளனர். உக்ரைனில் போர் தொடங்கியது இவர்கள் தங்களை மீட்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் மாணவர் நவநீத ஸ்ரீராமமுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியது மட்டுமின்றி அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தது மட்டுமின்றி தைரியாக இருக்க வேண்டும், அனைவரையும் பாத்திரமாக மீட்கப்படுவீர்கள் என்று கூறியுள்ளார்.
இதையெடுத்து மத்திய, மாநில அரசுகளின் தொடர்நடவடிக்கை காரணமாக கடந்த மாதம் 26ந்தேதி ஒரு குழுவிற்கு 50 பேர் என்பது அடிப்படையில் பஸ் மூலமாக கிளம்பி 27ந்தேதி ருமேனியா நாட்டு எல்லைகைக்கு வந்துள்ளனர். அங்கு ஒரு நாள் நீண்ட வரிசையில் நின்று எல்லையை கடந்து ருமேனியா நாட்டிற்குள்ள சென்றது அங்கு தயராக இருந்த இந்தியா தூதராக அதிகாரிகள் மாணவர்களை பாத்திரமாக அழைத்து சென்று அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர். மேலும் தமிழக அரசு ருமேனியாவில் தமிழ் மக்கள், சமூக நல அமைப்புகள் மூலமாக மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.கடந்த 3ந்தேதி அங்கிருந்து விமானம் மூலமாக கிளம்பி 4ந்தேதி டெல்லி வந்து அடைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து நேற்று சென்னைக்கு வந்துள்ளனர்.
பின்பு தமிழக அரசு சார்பில் மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். கோவில்பட்டியை சேர்ந்த 3 மாணவர்கள்,நெல்லை, தென்காசியை சேர்ந்த 2 மாணவர்கள் என 5 பேர் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானநிலையத்திற்கு வந்துள்ளனர். பின்னர் கோவில்பட்டி மாணவர்கள் 3 பேரும் கார் மூலமாக ஊருக்கு திரும்பியுள்ளனர். உக்ரைனில் இருந்து மாணவர்கள் வீடும் திரும்பும் வரையிலும் அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து மாணவர்களை வீட்டில் வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து கோவில்பட்டி மாணவர்கள் கூறுகையில் போர் தொடங்கியது முதல் பதற்றம் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு மணிநேரம் தாங்கள் பதற்றத்தில் இருந்ததாகவும், சிலர் நேரம் பதுங்கு குழியில் இருக்க வேண்டிய நிலை இருந்தது என்றும், ஒருவித பதற்றம் மற்றும் பயத்தில் இருந்ததாகவும், ஆனால் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக ஏற்பாடு செய்து தங்களை மீட்டு வந்துள்ளதாகவும், எவ்வித குறையும் இல்லமால் அனைத்து வசதிகளையும் அரசு செய்து இருந்ததாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு தங்களுடைய நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், தொடர்ந்து தாங்கள் தங்கள் கல்வியை தொடர மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.
தொலைக்காட்சியில் போர் செய்திகளை பார்க்கும் போது மிகுந்த மன வேதனையில் இருந்தாவும், தங்கள் குழந்தைகள் மட்டுமல்ல, அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தாகவும், மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக நடவடிக்கை எடுத்து குழந்தைகளை மீட்டு வந்துள்ளதாகவும், மீதமுள்ள அனைவரையும் மீட்டு வர வேண்டும், இவர்களின் கல்வி தொடருவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்கின்றனர் உக்ரைனில் இருந்து திரும்பி வந்துள்ள மாணவர்களின் பெற்றோர்கள்.
Comments
Post a Comment