உக்ரைன் மீதான போரால் ரஷ்ய மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளதாக தகவல்கள்


உக்ரைன் மீதான போரால் ரஷ்ய மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளதாக தகவல்கள்


உக்ரைன் மீதான போரால் ரஷ்ய மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னர் பெற்ற பலன்களை அந்நாட்டு மக்கள் இழந்துள்ளனர்.

உக்ரைன் மீதா போரால் பொருளாதார விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது. டாலருக்கு நிகரான ரஷிய பணமான ‘ரூபிள்’ மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.

ரஷ்ய வங்கிகள் மீதான பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டு நிதிச் சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய சந்தையில் கடந்த வாரத்தில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களின் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சாதாரண ரஷிய குடிமக்கள் போருக்கு முன் அனுபவித்து வந்த பயன்களை இப்போது இழக்க தொடங்கி உள்ளனர். நாடு முழுவதும் ஏராளமான ரஷ்யர்கள் கூகுள் பே மற்றும் ஆப்பிள் பே பயன்படுத்துகின்றனர். அன்றாட தேவைகளுக்கு அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் வழியாக பயன்படுத்தும் இணைய வழி பரிவர்த்தனைகளை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது.

ரஷிய மக்களுடைய விசா - மாஸ்டர் கார்டு போன்ற ஏடிஎம் கார்டுகள் செயலற்று போயின. கூகுள், பேஸ்புக் மற்றும் யூடியூப் உடன் இணைந்து ரஷ்ய அரசு ஊடகங்கள் அதன் தளங்களில் பணம் சம்பாதிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளன. போர் பதற்றம் தொடங்கியதிலிருந்தே ஏ டி எம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்தனர். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான தொகையை மட்டுமே ஒருவர் எடுத்து கொள்ள முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பணத்தேவைக்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர்.

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற ரஷியவாசிகள் இப்போது உலக நாடுகள் ரஷியாவிற்கு விமானம் இயக்க தடை செய்யப்பட்டுள்ளதால் திக்கற்ற நிலையில் உள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் ரஷியர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்கள் தங்கள் தாயகம் திரும்ப வழியின்றி திண்டாடி வருகின்றனர். இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் வரிசையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனமும் ரஷியாவில் தங்கள் நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவன பொருட்களை வாங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

பிரபல சினிமா பட நிறுவனங்களான யூனிவர்சல் பிக்சர்ஸ், சோனி, பாராமவுண்ட் பிக்சர்ஸ், வால்ட் டிஸ்னி கம்பெனி போன்ற ஹாலிவுட் நிறுவனங்கள் ரஷியாவில் தங்கள் சேவைகளை தடை செய்துள்ளன. இதனால் மக்கள் தாங்கள் விரும்பும் படங்களை பார்க்க முடியாத சூழல் உள்ளது.

Comments

Popular posts from this blog