கொத்துக் கொத்தாய் இருக்கும் வெள்ளை முடியை, கறுப்பாக மாற்றும் கொய்யா இலை. இனி தேடினாலும் உங்கள் தலையில் வெள்ளை முடி இருக்காது.


கொத்துக் கொத்தாய் இருக்கும் வெள்ளை முடியை, கறுப்பாக மாற்றும் கொய்யா இலை. இனி தேடினாலும் உங்கள் தலையில் வெள்ளை முடி இருக்காது.


நரை முடி பிரச்சனை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்ட பெரிய போராட்டமாக இருக்கிறது. ஒரே நிமிடத்தில் நரை முடியை வெள்ளையாக மாற்றுவதற்கு இன்று நம்முடைய கையில் நிறைய செயற்கையான பொருட்கள் இருக்கலாம். ஆனால், அந்தப் பொருட்களின் மூலம் நமக்கு வரக்கூடிய பாதிப்பை ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தால் கூட அதை எல்லாம் நீங்கள் பயன்படுத்தவே மாட்டீர்கள். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சில குறிப்புகளை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக ஏதாவது ஒரு குறிப்பு உங்களுக்குப் பலன் தரும்.

ஒரு குறிப்பை ஒரே ஒரு முறை பயன்படுத்தி பார்த்து விட்டு, இது சரி இல்லை என்று மாற்றி விடாதீர்கள். மூன்று மாதம் ஒரு குறிப்பை பின்பற்றும் போது தான் அதில் நமக்கு என்ன பலன் கிடைக்கும். ஏனென்றால் இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களுக்கு சக்தி அதிகம். ஆனால் அதன் மூலம் நான் பலனைப் பெறுவதற்கு சிறிது காலம் எடுக்கும். அவ்வளவு தான். அப்படிப்பட்ட ஒரு சூப்பரான செலவில்லாத ரெமிடியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

பெரும்பாலும் கொய்யா இலை எல்லாருக்கும் சுலபமான கிடைக்கக்கூடிய ஒரு இலைதான். தெரிந்தவர்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் கூட அதில் இருந்து ஒரு பத்து இலைகளை பறித்து எடுத்து வாருங்கள். அதன் பின்பு நெல்லிக்காய் எண்ணெய் நமக்கு தேவை. கூஸ்பெரி ஆயில் (gooseberry oil) என்று கேட்டாலே கொடுப்பார்கள். கடையில் கிடைக்கவில்லை என்றால் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளுங்கள்.

nellikai-oil

எடுத்து வந்த கொய்யா இலைகளை கழுவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து வடிகட்டி அதனுடைய சாறை மட்டும் கொஞ்சம் திக்காக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கொய்யா இலை சாறுடன் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நமக்கு தேவையான பேக் தயாராகிவிட்டது.

- Advertisement -

உங்களுடைய தலையில் எந்த இடத்தில் எல்லாம் நரைமுடி இருக்கின்றதோ அந்த இடத்தில் எல்லாம் இந்த கலவையை நன்றாக பூசி 2 மணி நேரம் அப்படியே காய விட்டு விடுங்கள். அதன்பின்பு ஷாம்பு சீயக்காய் எதுவுமே போடாமல் வெறும் தண்ணீரில் தலையை அலசிக் கொள்ள வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இப்படி செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதம் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய தலைமுடியில் என்ன மாற்றம் தெரிகிறது என்பதையும் நீங்களே கண்ணாடி முன்பு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

white hair

மேல் சொன்ன குறிப்பை பின்பற்றி உங்களுடைய தலைமுடி கருப்பாக மாறி விட்டால் அது நிரந்தரமாக கருப்பாக இருக்கும். அவ்வளவு சீக்கிரத்தில் முடி மீண்டும் வெள்ளையாக மாறுவதற்கு வாய்ப்பு கிடையாது. சிரமப் பட்டாவது இப்படிப்பட்ட இயற்கையான வழிமுறைகளை முயற்சி செய்து பார்த்து உங்களுடைய வெள்ளை முடியை கருப்பாக மாற்றிக்கொள்ளுங்கள். அழகும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்.

Comments

Popular posts from this blog

Poulet au Vin Jaune de Jura Creamy Braised Chicken with Jura Wine and Morels #Wine

2 Budget