பொருளாதாரம் மந்தமானாலும் மக்கள் உயர்நிலை ஸ்மார்ட்போன்கள் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள்.. குவால்காம் CEO நம்பிக்கை
பொருளாதாரம் மந்தமானாலும் மக்கள் உயர்நிலை ஸ்மார்ட்போன்கள் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள்.. குவால்காம் CEO நம்பிக்கை
டாவோஸில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் (WEF) நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் இது தொடர்பாக பேசிய அவர் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் மக்கள் உயர்நிலை ஸ்மார்ட் போன்களை வாங்குவார்கள் என்றும் தற்போதைய சூழலிலும் கூட வளர்ச்சிக்கான இடத்தை காண்பதாகவும் கூறி இருக்கிறார். பெருந்தொற்று காரணமாக ரீட்டெயிலர்கள் தங்கள் கடைகளை மூடியதாலும், மக்கள் புதிய மொபைல்களை வாங்குவதை தாமதப்படுத்தியதாலும் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை சுமார் 12.5% சரிந்தது.
இருப்பினும் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டதும் மற்றும் அதிக விலை புள்ளிகளில் 5G மொபைல்கள் கிடைப்பதும் கடந்த ஆண்டு ஸ்மார்ட் போன்களின் விற்பனையை 6% அதிகரிக்க வழி வகுத்தது. Qualcomm ஸ்மார்ட் போன் சிப்களில் மார்க்கெட்டில் முன்னணியில் உள்ளது. பிரீமியம் செக்மென்ட்டில் கிட்டத்தட்ட ஏகபோகத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளது. உற்பத்தியாளர்களுக்கு ப்ராசஸர்கள் மற்றும் மோடம்கள் உட்பட பல்வேறு கூறுகளை வழங்குகிறது. குவால்காம் அதன் தொழில்நுட்ப திறன்களை விரிவுபடுத்துகிறது மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) போன்ற புதிய பகுதிகளுக்குள் நுழைகிறது.
இதனிடையே நேர்காணலில் பேசிய குவால்காம் இன்க் தலைமை நிர்வாகி க்ரிஸ்டியனோ அமான், COVID-19 தொற்றுநோய் முழுவதும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நுகர்வோர் அதிகளவில் "சிறந்த போன்களை" பயன்படுத்த விரும்புவதால், சிப் சப்ளையரஸ் வளர்ச்சியை காண்பதாக குறிப்பிட்டார். தொற்று நேரத்தில் கனெக்டிவிட்டி மற்றும் மொபைல் டெக்னலாஜி முக்கிய பங்கை கொண்டுள்ளது. அதாவது மேம்பட்ட மொபைல்கள் மற்றும் புதிய அம்சங்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
Also Read : உஷார்.. உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் டைப் செய்யும் அனைத்தையும் ஹேக் செய்யயலாம் - பாதுகாப்பது எப்படி?
குவால்காம் அதன் மொபைல் உத்தியை பிரீமியம் மற்றும் ஹை-டயர்களில் கவனம் செலுத்த மறுவரையறை செய்துள்ளது. மேலும் ஃபிளாட் மார்கெட்டில் எண்கள் பங்கை அதிகரித்து உள்ளோம். உதாரணமாக Samsung Galaxy போன்ற டிவைஸ்களில் முன்பு நாங்கள் 40% பங்கைக் கொண்டிருந்தோம், இப்போது எங்களிடம் 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று கூறி இருக்கிறார் அமான். வேலை மற்றும் பள்ளியில் ஜூம் மீட்டிங்ஸ் மற்றும் குடும்பத்துடன் தொடர்பில் இருக்க என ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது. தங்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மக்கள் அதிக திறன்கள் கொண்ட சிறந்த மொபைல்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Also Read : ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு தரமான 5ஜி போனை தேடுறீங்களா?
இவை மொபைல் மார்க்கெட்டை பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும் கூட நிலையானதாக வைத்திருக்கும் விஷயங்கள் என்றார் க்ரிஸ்டியனோ அமான். ஃபேஸ்புக்குடனான குவால்காமின் உறவு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது என்ற அமான், ஃபோன்களைப் போல ஆக்மென்ட் ரியாலிட்டி (Augmented reality) பெரியதாக இருக்கலாம் என்றார். ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் இன்க் மற்றும் டிக்டாக்குடன் விர்ச்சுவல் மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி டிவைஸ்களுக்காக குவால்காம் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளது. மேலும் சில விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார் க்ரிஸ்டியனோ அமான்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment