தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.!2107120538


தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.!


மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் நீலகிரி, திருப்பூர், தேனி,திண்டுக்கல், விழுப்புரம், கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி பகுதிகளை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24-மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்ஸியஸ் இருக்க கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

rrb ntpc stage ii exam date: RRB NTPC CBT-2 தேர்வு தேதி அறிவிப்பு; முழு விவரங்களை இங்கே சரிபார்க்கவும்..! – rrb ntpc cbt 2 2022 exam date declared, pay level 4 & 6 paper on may 9 and 10

தனுசு ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 07 முதல் நவம்பர் 13 ) - Dhanusu Rasipalan.

ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை.. மனைவி புகார்.. வாபஸ் பெற தொடர்ந்து நெருக்கடி... Miatamil