இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் பயங்கர வன்முறை- 127 பேர் பலி; 180 பேர் படுகாயம்889302783


இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் பயங்கர வன்முறை- 127 பேர் பலி; 180 பேர் படுகாயம்


இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இந்தோனேசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

 

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், Arema FC- Persebaya Surabaya ஆகிய இரு அணிகள் மோதின. இரு அணிகளின் ரசிகர்களும் தொடக்கம் முதலே போட்டிகளை வெறித்தனமாக ரசித்து வந்தனர்

இந்தப் போட்டியில் Arema FC அணியை Persebaya Surabaya அணி வீழ்த்தியது. இதனால் Arema FC அணியின் ரசிகர்கள் கொந்தளித்து போயினர். இதனையடுத்து மைதானத்துக்குள் இறங்கி ரகளையில் அவர்கள் ஈடுபட்டனர்.

 

ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். அப்போது நூற்றுக்கணக்கானோர் இந்த கண்ணீர்புகை குண்டுகளுக்கு இடையே சிக்கி மூச்சுவிட முடியாமல் திணறினர். மேலும் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

 

கால்பந்து ரசிகர்களின் இந்த ரகளை பெரும் ரணகளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மோதலில் தற்போது வரை 127 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 180 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து எஞ்சிய கால்பந்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

Poulet au Vin Jaune de Jura Creamy Braised Chicken with Jura Wine and Morels #Wine

2 Budget