நரபலிக்கு கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை.. அழுகுரல் சத்தம் பின்னர் நடப்பது என்ன பாருங்கள். நாகர்கோவிலில் பகீர்! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கண்ணன் - அகிலா தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கண்ணன் சென்னையில் ஐடி ஊழியராக பணியாற்றி வருவதால் இவர்கள் குடும்பமாக சென்னையில் தங்கி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் வீட்டின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தக்கலை சென்ற கண்ணன் குடும்பத்தினர் விருந்தை முடித்து விட்டு அகிலாவின் தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு குடும்பமாக அனைவரும் பேசி கொண்டிருந்த போது வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த 2 வயது மகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரவு நேரம் என்றும் பாராமல் குழந்தையை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். கிணற்றில் விழுந்திருக்குமோ என்றெல்லாம் எண்ணி தண்ணீரை வாரி தேடியுள்ளனர். சிசிடிவியிலும் குழந்தை பதிவாகதால், குழந்தை அருகில் தான் இருக்க வேண்...