ஒரு நொடி கூட தூங்காமல் 60 வருடம் ஹாப்பியா வாழும் அதிசய பிறவி தாத்தா854672359

ஒரு நொடி கூட தூங்காமல் 60 வருடம் ஹாப்பியா வாழும் அதிசய பிறவி தாத்தா
வியட்நாமை சேர்ந்த ஒரு தாத்தா கடந்த 60 ஆண்டுகளாக தூங்காமல் இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாராம். வியட்நாம் நாட்டை சேர்ந்த 80 வயது முதியவர் தாய் நகோக். இவர் 1962ல் தனது 20வது வயதில் வித்தியாசமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்த அவருக்கு தூக்கம் வராமலே இருந்துள்ளது. இதுகுறித்து பல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்தபோதும் அவருக்கு தூக்கம் வரவில்லையாம்.
இதனால் தூங்காமலே இருந்து பழகிவிட்டதால் கடந்த 60 ஆண்டுகளாக தூங்காமலே வாழ்ந்து வருகிறார். பொதுவாக தூங்காமல் இருந்தால் பலவித உடல்நல கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுவதுண்டு. ஆனால், இவர் தூக்கம் இல்லாவிட்டாலும் உடல்நல குறைகள் இன்றி மகிழ்ச்சியாக 80 ஆண்டுகளாக வாழ்ந்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர் உண்மையிலேயே அதிசய தாத்தா தான்.
Comments
Post a Comment