IND vs ENG: ‘டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில்’…3 சர்பரைஸ் தேர்வு: இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தீங்க?
IND vs ENG: ‘டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில்’…3 சர்பரைஸ் தேர்வு: இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தீங்க?
கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கிய இத்தொடர் இம்மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கே.எல்.ராகுல், துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் 15ஆவது சீசனில் காட்டடி அடித்த தினேஷ் கார்த்திக்கும் இடம்பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி: (IND vs ENG: ‘டெஸ்ட் போட்டி’…இந்திய அணி அறிவிப்பு: ஸ்டார் வீரர் நீக்கம்...புஜாராவுக்கு இடம்!)
இதனைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று, கடந்த ஆண்டில் விளையாடமல் விடப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் (ஜூலை 1-5) பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோஹித் ஷர்மா, துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக விளையாடி திறமையை நிரூபித்த அஜிங்கிய ரஹானேவிற்கு இடம் வழங்கப்படவில்லை.
இந்திய அணி (இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்): ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, புஜாரா, ரிஷப் பந்த், கேஎல் பரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்தூல் தாகூர், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
இந்த அணியில் 3 சர்பரைஸ் தேர்வுகள் இருப்பதாக கருதப்படுகிறது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
பிரசித் கிருஷ்ணா இதுவரை மொத்தம் 7 ஒருநாள் போட்டிகளில் 18 விக்கெட்களை சாய்த்துள்ளார். இன்னமும் டெஸ்டில் அறிமுகமாகவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த டெஸ்ட் அணியில் பும்ரா, சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்தூல் தாகூர், ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் நல்ல வேகம் போடக் கூடியவர்கள் என்பதால் கூடுதலாக ஒரு ஸ்விங் பௌலராக புவனேஷ்வர் குமாரை சேர்ந்திருந்தால் நன்றாக இருக்கும் எனக் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதைவிட்டுவிட்டு ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக பிரசித் கிருஷ்ணாவை சேர்த்திருப்பது சரியல்ல எனவும் பலர் கூறி வருகிறார்கள். கடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில்போது புஜாராவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. காரணம், அதற்குமுன்பு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 20.67 சராசரியுடன் 124 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்புகூட, 4 போட்டிகளில் இரண்டு அரை சதங்களை மட்டுமே அடித்திருந்தார். 2019ஆம் ஆண்டிற்கு பிறகு சதமே அடிக்காமல் இருந்தார். இதனால், இனி புஜாராவுக்கு பதிலாக ஹனுமா விஹாரிக்குத்தான் இடம் கிடைக்கும் எனக் கருதப்பட்டது. இந்நிலையில் கவுண்டியில் புஜாரா அபாரமாக விளையாடி தனது இடத்தை மீண்டும் பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக படுமோசமாக திணறினார். துஷ்மந்த் சமீரா, உம்ரான் மாலிக் போன்ற வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஷார்ட் பால்களுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பி வருகிறார். இங்கிலாந்து மைதானத்தில் வேகத்திற்கு பேர்போனவை. அங்கு ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்ற அனுபவ பௌலர்களுக்கு எதிராக ஷ்ரேயஸ் ஐயர் தாக்குப்பிடிப்பது கஷ்டம். இதனால், இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தீர்கள் என பலரும் பிசிசிஐயை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.3.பிரசித் கிருஷ்ணா:
2.புஜாரா:
1.ஷ்ரேயஸ் ஐயர்:
Comments
Post a Comment