ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), NTPC CBT II 2022-க்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. RRB CBT II அறிவிப்பின்படி, ஊதிய நிலை-4 மற்றும் 6-க்கான தேர்வு மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும். NTPC CTB-1 இல் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் RRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rrbcdg.gov.in இல் CBT-2 தேர்வு தேதி அறிவிப்பைப் பார்க்கலாம். ஊதிய நிலைகள் 2, 3 மற்றும் 5-க்கான தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் CBT-2 தேர்வை எழுதுவார்கள் RRB தற்போது CBT-2 இன் ஊதிய நிலை 4 மற்றும் 6-க்கான தற்காலிக தேர்வு தேதியை அறிவித்துள்ளது. ஊதிய நிலை 2, 3 மற்றும் 5-க்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். RRB NTPC CBT-1 இன் முடிவுகள் RRB இன் பிராந்திய இணையதளங்களில் மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 1, 2022 அன்று அறிவிக்கப்பட்டது.... விரிவாக படிக்க >>
ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை.. மனைவி புகார்.. வாபஸ் பெற தொடர்ந்து நெருக்கடி... Miatamil தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சிந்தமணி நகரில் வசித்து வருபவர் முத்துச்சேர்மன். இவருடைய மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். திடீரென உடல்நிலை சரியில்லாததால் பணிக்கு செல்ல முடியவில்லை. பிப்ரவரி 25ம் தேதி முத்துச்சேர்மன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் சூறவாளி என்பவர் விறகு வெட்டும் வேலைக்காக அழைத்து சென்றார் மாலையில் வீடு திரும்பிய மனைவியிடம் முத்துச்சேர்மன் அழுது கொண்டே நடந்தை கண்ணீர் மல்க கூறினார். அப்போது சூறாவளி தம்மை அழைத்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து வலுக்கட்டாயமாக தனக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டனர் எனத் தெரிவித்தார். அத்துடன் வலி அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் ரூ 1,100க்கு காசோலையையும் கொடுத்ததாக...
உக்ரைன் மீதான போரால் ரஷ்ய மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளதாக தகவல்கள் உக்ரைன் மீதான போரால் ரஷ்ய மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னர் பெற்ற பலன்களை அந்நாட்டு மக்கள் இழந்துள்ளனர். உக்ரைன் மீதா போரால் பொருளாதார விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது. டாலருக்கு நிகரான ரஷிய பணமான ‘ ரூபிள் ’ மதிப்பு மிகவும் குறைந்துள்ளது. ரஷ்ய வங்கிகள் மீதான பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டு நிதிச் சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய சந்தையில் கடந்த வாரத்தில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களின் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சாதாரண ரஷிய குடிமக்கள் போருக்கு முன் அனுபவித்து வந்த பயன்களை இப்போது இழக்க தொடங்கி உள்ளனர். நாடு முழுவதும் ஏராளமான ரஷ்யர்கள் கூகுள் பே மற்றும் ஆப்பிள் பே பயன்படுத்துகின்றனர். அன்றாட தேவைகளுக்கு அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் வழியாக பயன்படுத்தும் இணைய வழி பரிவர்த்தனைகளை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. ரஷிய மக்களுடைய விசா - மாஸ்டர் கார்டு போன்ற ஏடிஎம் கார்டுகள் செயலற்று போயின. கூகுள், பேஸ்புக் மற்றும் யூடிய...
Comments
Post a Comment