குரங்கு அம்மை வைரஸ் அறிகுறி இருந்தால் உடனே தனிமை – தமிழக அரசு அவசர அறிவிப்பு இங்கிலாந்தில் முதன்முதலாக தென்பட்ட குரங்கு அம்மை வைரஸ், தற்போது 12 நாடுகளுக்கு பரவியுள்ளது. இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நைஜீரியாவிற்கு பயண வரலாற்றைக் கொண்டிருந்தாலும், மற்றவர்களுக்கு எப்படி பரவியதற்கான காரணத்தை சுகாதாரத் துறையினர் கண்டறிந்து வருகின்றனர். இந்த வைரஸின் பூர்விகமாக நைஜீரியா உள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை 80 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 50 பேர் கண்காணிப்பு வட்டத்தில் உள்ளனர். கண்காணிப்பை அதிகரிக்கும் போது,பாதிப்புகள் அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகவில்லை என்றாலும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருவதாக அறிவித்துள்ளது. ...